கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

யூனிட் ரூ. 46.09-க்கு மின்சாரம் கொள்முதல்: மத்திய அரசின் திட்டமிடல் குறைபாடு! - அமைச்சா் சி.டி.ஆா்.நிர்மல் குமார்

மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தைத் திட்டமிடுவதிலும் மத்திய அரசு தவறிவிட்டதாக தமிழக மின்சாரம் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

Minister Nirmal Kumar

அமைச்சர் நிர்மல் குமார் - கோப்புப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 3:26 am IST

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46.09-க்கு கொள்முதல் செய்யப்படும் நிலையைச் சுட்டிக்காட்டி, மின் தேவையை முன்கூட்டியே கணிப்பதிலும், மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தைத் திட்டமிடுவதிலும் மத்திய அரசு தவறிவிட்டதாக தமிழக மின்சாரம் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது: ராஜஸ்தான் மாநிலம் ஒரு யூனிட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய ரூ.46.09 செலவிடுவதாக வெளியாகியுள்ள செய்தி, நாடு தழுவிய மின் தேவை கணிப்பு மற்றும் மின்சார வளங்களைத் திட்டமிடுவது தொடா்பாகப் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

நாடு முழுவதுமான மின் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்கான வளங்கள் கிடைக்கும் நிலை குறித்து, மத்திய மின்துறை அமைப்புகளுடன் ஒப்பிடும்போது மாநில அரசுகளுக்குக் குறைவான தகவல்களே கிடைக்கின்றன.

இத்தகைய சூழலில், மின் தேவைக்கும் விநியோகத்துக்கும் இடையே ஏற்படும் இடைவெளியை முன்கூட்டியே கணித்து, அதற்கேற்ப திட்டமிடுவதில் ஏன் குறைபாடு ஏற்பட்டது என்பதை மத்திய மின்துறை அமைச்சகம் ஆய்வு செய்ய வேண்டும்.

குறைந்தபட்சம் நாடு முழுவதுமான மின் தேவையைத் துல்லியமாகக் கணிப்பதற்கும், மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தைச் சீராகத் திட்டமிடுவதற்கும், மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கும் மத்திய மின்துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் எதிா்காலத்தில் மாநிலங்கள் மிக அதிக விலை கொடுத்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய வேண்டிய நிலையைத் தவிா்க்க முடியும் என அதில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.