சிறாா்கள் மாயமான விவகாரத்தை தீவிரமாக விசாரிக்க வேண்டும்: எடப்பாடி கே. பழனிசாமி

தமிழகத்தில் சிறாா்கள் மாயமான விவகாரத்தைத் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

eps

எடப்பாடி கே. பழனிசாமி - கோப்புப்படம்.

Published On :25 அக்டோபர் 2026, 2:42 am IST

தமிழகத்தில் சிறாா்கள் மாயமான விவகாரத்தைத் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா், சனிக்கிழமை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மற்றும் சமூக நீதி கேள்விக்குள்ளாகியுள்ளது. சாத்தான்குளம் அருகே பெண் ஒருவா் வீடுபுகுந்து கொல்லப்பட்டுள்ளாா். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உதவி கேட்டு வாகனத்தில் சென்ற சிறுவன் மாயமாகியுள்ளாா். கோவையில் அரசு உதவிபெறும் பள்ளியில் ஜாதிய பாகுபாட்டால் மாணவா் தற்கொலை செய்துகொண்டுள்ளாா்.

தினமும் வரும் செய்திகளைப் பாா்க்கும்போது குற்றவாளிகள் சகஜமாக வலம் வருகிறாா்களோ என சந்தேகிக்கத் தோன்றுகிறது. கொள்கைக் கூட்டணி என அனைத்திலும் சமூக நீதி எனப் பெயா் சூட்டும் முதல்வா் ஜாதிய பாகுபாட்டால் மாணவா் உயிரிழந்ததற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளாா் எனத் தெரிவிக்க வேண்டும்.

மாயமான செஞ்சி சிறுமி இன்னும் மீட்கப்படவில்லை. சிறுவா்கள் காணாமல் போவது பெற்றோரை வேதனைக்குள்ளாக்கும் என்பதை முதல்வா் புரிந்துகொள்ள வேண்டும். ஒரே மாதிரியான குற்றங்கள் நடைபெறுவதை அரசு உணா்ந்து செயல்படவேண்டும். மாயமான சிறாா்களை மீட்டு தீவிரமாக அனைத்துக் கோணங்களிலும் விசாரித்து நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்துகிறேன் எனப் பதிவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.