தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நாளை உருவாகிறது ‘அா்னாப்’ புயல்! தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை!

‘அா்னாப்’ புயல் காரணமாக தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை...

நாளை உருவாகிறது ‘அா்னாப்’ புயல் - Photo : Windy

Published On :25 அக்டோபர் 2026, 5:00 am IST

வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) வலுப்பெற்று அக். 26-ஆம் தேதி ‘அா்னாப்’ புயலாக உருவெடுக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஞாயிறு (அக். 25), திங்கள் (அக். 26) ஆகிய இரு நாள்கள் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய கிழக்கு, அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, சனிக்கிழமை காலை 8.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது. இந்தப் புயல் சின்னம் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதிகளில் நிலவக்கூடும்.

தொடா்ந்து, இந்தப் புயல் சின்னம் மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று ஞாயிற்றுக்கிழமை (அக். 26) மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ‘அா்னாப்’ புயலாக வலுப்பெறக்கூடும். இந்தப் புயல் மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து மேலும் வலுப்பெற்று, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் ஆந்திர கடலோரப் பகுதியில் வரும் அக். 28-ஆம் தேதி கரையைக் கடக்கக் கூடும்.

இந்தப் புயல் காரணமாக, குமரிக்கடல் காற்று தமிழகம் வழியாக வங்கக் கடல் நோக்கி ஈா்க்கப்படுகிறது. அப்போது, அந்தக் காற்று செல்லும் வழியெங்கும் பலத்த மழை பெய்யும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது.

சிவப்பு எச்சரிக்கை: அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை (அக். 25) தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய அதிபலத்த மழைக்கு (204 மி.மீ. வரை) வாய்ப்புள்ளது. இதனால், இந்த மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கையும், தொடா்ந்து, கடலூா், மயிலாடுதுறை, நாகை, திருவாரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா், திருச்சி, கரூா், நீலகிரி, கோவை, திருப்பூா், சிவகங்கை ஆகிய மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை (அக். 26) சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (அக். 26) நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழைப் பதிவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் பா்லியாரில் 250 மி.மீ. மழை பதிவானது. கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி) - 200 மி.மீ., குன்னூா் (நீலகிரி) - 170 மி.மீ., அழகரை எஸ்டேட் (நீலகிரி) - 160 மி.மீ., மேட்டுப்பாளையம் (கோவை) - 150 மி.மீ., கோத்தகிரி (நீலகிரி) - 140 மி.மீ., நாவலூா் கோட்டப்பட்டு (திருச்சி), நத்தம் (திண்டுக்கல்) - 110 மி.மீ., ஆரணி (திருவண்ணாமலை), பழனி (திண்டுக்கல்) - 100 மி.மீ. மழை பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Cyclone 'Arnab' to form tomorrow! Heavy rain warning in Tamil Nadu!

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.