மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

கடன் வாங்குவது குறைக்கப்பட்டது எப்படி? நிதியமைச்சர் மரியவில்சன் விளக்கம்

கடன் வாங்குவது குறைக்கப்பட்டது குறித்து நிதியமைச்சர் மரியவில்சன் விளக்கம் கொடுத்தது பற்றி..

TN Govt to Pass Special Assembly Resolution Against Delimitation Exercise

தமிழக சட்டப்பேரவை - (கோப்புப்படம்)

Published On :22 அக்டோபர் 2026, 5:52 pm IST

தமிழக அரசு கடன் வாங்குவது 21 சதவிகிதம் குறைக்கப்பட்டது எப்படி என்பது குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் விளக்கம் அளித்துள்ளார்.

நெல்லையில், மழை முன்னேற்பாடு நிலவரங்களை ஆய்வு செய்த அமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தற்போதுவரை நான்கு துறைகளில் தணிக்கை நடத்தப்பட்டு தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவரைப் பற்றி தற்போது பல விடியோக்கள் வெளியாகி வருகின்றன.

இதற்கு முன்னதாக தாங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் தற்போது 100% உண்மையாகி வருகிறது. மிக முக்கியமான துறையாகக் கருதப்படும் பள்ளிக் கல்வித் துறையில் சுமார் ரூ.100 கோடி முதல் ரூ.150 கோடிக்கும் மேல் ஊழல் நடைபெற்றுள்ளது. முக்கியமான கல்வித் துறையிலேயே ஊழல் செய்யக்கூடியவர்கள் திமுகவினர் என்பது தற்போது அன்பில் மகேஷ் விவகாரத்தின் மூலம் தெளிவாகத் தெரியவந்துள்ளது. தமிழக அரசின் நிதி நிலைமை மிகச் சிறப்பாக உள்ளது. முந்தைய ஆட்சியைப் போல் அல்லாமல், திட்டங்களில் ஊழலின்றி வெளிப்படைத்தன்மையுடன் நிதி கையாளப்படுகிறது.

நடப்பு நிதியாண்டில் கடன் வாங்கும் திறன் 21 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. கடன் பத்திரங்கள் மூலம் ரூ.40,500 கோடி திரட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 21 சதவிகிதம் குறைவாகும். அதேபோல், மூலதனச் செலவினத்தைப் பொறுத்தவரை, தேர்தல் நடத்தை விதிகளால் இரண்டு மாதங்கள் பணிகள் பாதிக்கப்பட்ட போதிலும், நடப்பு ஆண்டில் இதுவரை ரூ.12,346 கோடி செலவிடப்பட்டு ஆக்கப்பூர்வமான பணிகள் நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சியினர் வைக்கும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மக்கள் புறந்தள்ளுவார்கள் என கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் ஆனந்த்மோகன், நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட்புரூஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் ரெட்டியார் பட்டி நாராயணன், ஆர்.எஸ்.முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.