டிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

முதல்வர் விஜய் மக்களை நேரடியாக இதுவரை சந்திக்கவில்லை! சரத்குமார்

தமிழ்நாடு முதல்வர் விஜய் ஆட்சி குறித்து சரத்குமார் கருத்து...

Actor politician sarathkumar

சரத்குமார் - டிஎன்எஸ்

Published On :20 அக்டோபர் 2026, 10:19 am IST

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய், இதுவரை மக்களை நேரடியாக சந்திக்கவில்லை என்று பாஜக நிர்வாகியும் நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமாரிடம், தமிழ்நாட்டின் பாஜக தலைவராக பொறுப்பேற்க போகிறீர்களா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, ”பத்திரிகைகளில் தான் இதுபோன்ற செய்திகளை காண்கிறேன். கட்சித் தலைமை என்னிடம் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள சொன்னால், உங்களுக்கு தகவல் கூறுகிறேன்” என்றார்.

தொடர்ந்து முதல்வர் விஜய் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த சரத்குமார் பேசுகையில்,

”அவர் இன்னும் ஹனிமூன் பீரியட்டில் இருக்கிறார். 6 மாதங்கள் அவகாசம் வேண்டும் என்று கூறியுள்ளார். புதிதாக யார் வந்தாலும் நிர்வாகத்தில் என்ன நடக்கிறது, கோப்புகள் போன்றவற்றை தெரிந்துகொள்ள வேண்டும். பாஜக மாநிலத் தலைவராகவோ, மத்திய அமைச்சராகவோ இல்லாததால் கருத்து சொல்லும் நிலையில் நான் இல்லை. அதுதொடர்பாக ஆழமாக சிந்திக்கவும் இல்லை.

முதல்வர் விஜய் இன்னும் மக்களை நேராகச் சென்று பார்க்கவில்லை. அவர் செல்லும் நிகழ்ச்சிகளில் கூடும் மக்களை தான் சந்தித்து வருகிறார்.

சட்டம் - ஒழுங்கை பொறுத்தவரை பிற மாநிலங்களை போல தமிழ்நாட்டில் கலவரங்கள் ஏற்படுவதில்லை. ஆங்காங்கே நடக்கும் கொலைகள் அனைத்துக்கும் அரசு தான் காரணம் என்று கூற முடியாது. எந்த ஆட்சியாக இருந்தாலும் இந்த கருத்தை தான் நான் கூறுவேன்” என்றார்.

Summary

Chief Minister Vijay did not meet the people directly! Sarathkumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.