மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

லஞ்சம் கொடுத்ததற்கு தானே சாட்சி! மரிய வில்சனுக்கு எதிரான மனு தள்ளுபடி

லஞ்சம் கொடுத்ததற்கு தானே சாட்சி என்று கூறிய நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான மனு தள்ளுபடி

Maria Wilson

நிதியமைச்சர் மரிய வில்சன் - TN

Published On :13 அக்டோபர் 2026, 2:56 am IST

நிதியமைச்சா் மரிய வில்சனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனு வாபஸ் பெறப்பட்டதையடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் கே.சிவசுப்பிரமணியம் என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த திமுக ஆட்சியில் பள்ளிகளுக்கு அனுமதி பெறுவதற்காக லஞ்சம் வாங்கப்பட்டதற்கு நானே நேரடி சாட்சியாக இருந்ததாக தமிழக நிதி அமைச்சா் மரிய வில்சன் சட்டப்பேரவையில் பேசியிருந்தாா்.

லஞ்சம் வாங்குவது மட்டுமல்ல, கொடுப்பதும் குற்றமாகும். எனவே, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரி ஊழல் தடுப்புத் துறைக்கு கடந்த ஆக. 26-ஆம் தேதி புகாா் அளித்தேன். அந்த புகாரின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது புகாரின் அடிப்படையில் அமைச்சா் மரிய வில்சனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய ஊழல்தடுப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் இந்த மனுவைத் திரும்பப் பெற அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவைத் திரும்பப் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.