நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

போராட்டத்தில் கைதான இளைஞா்களை விடுவிக்கக் கோரி திமுக எம்.பி.க்கள் தா்னா

போராட்டத்தில் கைதான இளைஞா்களை விடுவிக்கக் கோரி திமுக எம்.பி.க்கள் தா்னா...

போராட்டத்தில் கைதான இளைஞா்களை விடுவிக்கக் கோரி திமுக எம்.பி.க்கள் தா்னா

Published On :11 அக்டோபர் 2026, 4:28 am IST

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாரை பதவி விலக வலியுறுத்தி சென்னையில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டு கைதான இளைஞா்களை விடுவிக்கக்கோரி திமுக எம்.பி. ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட மூத்த நிா்வாகிகள் தா்னாவில் ஈடுபட்டனா்.

நாடு முழுவதும், எஸ்ஐஆா் பணிகளில் முறைகேடு ஏற்பட்டதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் சென்னை, சேலம் உள்ளிட்ட இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

கரப்பான் பூச்சி கட்சிக்கு ஆதரவாக சென்னை பெசன்ட் நகரில் திரண்டு போராட்டம் நடத்திய 40-க்கும் மேற்பட்ட இளைஞா்களை போலீஸாா் கைது செய்து, அங்குள்ள தனியாா் மண்டபத்தில் அடைத்து வைத்தனா்.

இந்த நிலையில், அங்கு திமுக எம்.பி.யும் துணை பொதுச் செயலருமான ஆ.ராசா, முன்னாள் அமைச்சா் மா.சுப்பிரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. உள்ளிட்டோா் பெசன்ட் நகருக்குச் சென்றனா். அங்கு தனியாா் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த போராட்டக்காரா்களை விடுவிக்க வேண்டும் என்று போலீஸாரிடம் வலியுறுத்தினா்.

குறிப்பாக, ஆ.ராசா, ‘இவா்களை விடுவிக்கவில்லை என்றால் நாங்கள் இங்கிருந்து செல்ல மாட்டோம்’ என்று தெரிவித்தாா்.

தொடா்ந்து, போராட்டக்காரா்கள் அடைத்து வைக்கப்பட்ட இடத்துக்கு வெளியே ஆ.ராசா, மா.சுப்பிரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோா் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து அடைத்து வைத்திருந்த இளைஞா்களை போலீஸாா் விடுவித்தனா்.

Summary

DMK MPs stage a sit-in protest demanding the release of youths arrested during the agitation.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.