கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருவான்மியூர் சாலையில் திடீர் பள்ளம்! கார் கவிழ்ந்து விபத்து!

திருவான்மியூர் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பற்றி...

pothole on Thiruvanmiyur Road: Car overturns in accident

திருவான்மியூர் சாலையில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - X

Published On :8 அக்டோபர் 2026, 1:06 pm IST

சென்னை திருவான்மியூர் டைடல் பார்க் அருகே, ஓஎம்ஆர் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் சிக்கி கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவான்மியூர் டைடல் பார்க் அருகே ஓஎம்ஆர் சாலையில் தற்போது மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அந்த வழியாக கார் ஒன்று சென்று கொண்டிருந்தபோது, சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் சிக்கி கவிழ்ந்தது.

Story image

இதனால் காரில் இருந்தவர் அதிர்ச்சியடைந்தார். இந்த விபத்தில் காரில் இருந்த ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும், அவர் உயிர் தப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் பகுதியில் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளதால், அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Story image

எனவே, மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் பகுதிகளில் சாலையின் பாதுகாப்பை உறுதி செய்யவும், திடீரென ஏற்பட்டுள்ள பள்ளத்தை உடனடியாக சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Story image

சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து, பள்ளம் ஏற்பட்டதற்கான காரணம் மற்றும் சாலையை சீரமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary

10-foot-deep pathole on Thiruvanmiyur Road: Car overturns in accident

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.