நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

துவரம் பருப்பு கொள்முதல் விலையில் கிலோவுக்கு ரூ.31 மிச்சம்! தவெக அரசு தகவல்

துவரம் பருப்பு கொள்முதல் விலையில் கிலோவுக்கு ரூ.31 மிச்சம் பிடித்து இருப்பதாக வெளியான தகவல் பற்றி..

நியாயவிலைக் கடையில் முதல்வர் விஜய்

நியாயவிலைக் கடையில் முதல்வர் விஜய் - கோப்பிலிருந்து

Published On :5 அக்டோபர் 2026, 3:04 pm IST

தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் மக்களுக்கு வழங்கப்படும் துவரம் பருப்பைக், கடந்த காலங்களைக் காட்டிலும் குறைவான விலையில் கொள்முதல் செய்து ரூ.187 கோடியை தவெக அரசு மிச்சம் பிடித்திருப்பதாக குடிமைப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில், அரிசி, சர்க்கரை, கோதுமையுடன் துவரம் பருப்பும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக தமிழக அரசு துவரம் பருப்பு கொள்முதல் செய்து வழங்கி வருகிறது. இது குறித்து குடிமைப்பொருள் வழங்கல் துறை கூறியதாக வெளியான தகவலில், துவரம் பருப்பு கொள்முதல் விலையை குறைத்து கடந்த மூன்று மாதங்களில் ரூ.187 கோடி அளவுக்கு தவெக அரசு மிச்சம் பிடித்துள்ளது.

அதாவது கடந்த திமுக ஆட்சியில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.109.15க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், தவெக அரசு ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.77.89-க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது முந்தைய விலையுடன் ஒப்பிடுகையில் ரூ.31 குறைவாக கொள்முதல் செய்யப்பட்டது. இதனால், கடந்த மூன்று மாத காலத்தில் செலவுத் தொகையில் ரூ.187 கோடி மிச்சம் பிடித்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

அதாவது, கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் துவரம் பருப்பு கொள்முதலுக்கு திமுக ஆட்சியில் ரூ.654 கோடி செலவிடப்பட்டது. ஆனால் தவெக ஆட்சியில் ரூ.467 கோடி செலவிடப்பட்டு, ரூ.187 கோடி மிச்சம் பிடிக்கப்பட்டுள்ளது.

நியாயவிலைக் கடைகளுக்கு வழங்க 60 ஆயிரம் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விலை குறைந்தாலும் தரத்தில் எவ்வித குறையும் இல்லை என்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை தெளிவுபடுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.