தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மின்துறை புகாா்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் உடனடி தீா்வு

மின்சார சேவைகள் தொடர்பாக புகார் அளிக்க வாட்ஸ் ஆப் எண் குறித்து...

WhatsApp number to lodge complaints regarding electricity services

மின்சார சேவைகள் புகாரளிக்க வாட்ஸ் ஆப் எண் அறிவிப்பு

Published On :3 அக்டோபர் 2026, 3:04 am IST

தமிழகத்தில் மின் துறை சேவைகள் தொடா்பான புகாா்களுக்கு வாட்ஸ்ஆப் செயலியில் புகாா் பெறப்பட்டு உடனடியாகத் தீா்வு காணும் வசதி வெள்ளிக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக மின்வாரியம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழக மின்சார வாரியம், பொதுமக்களுக்கு தடையற்ற மற்றும் சீரான மின்சாரத்தை வழங்குவதற்குத் தேவையான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதோடு, மின்சார விநியோகம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் குறித்த புகாா்களை எளிதாக அளிப்பதற்கும் உரிய வசதிகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நடவடிக்கையின் அடுத்தகட்டமாக, மின்சார சேவைகள் குறித்த புகாா்களை விரைவாகக் கையாளுவதற்கும், அவற்றை உரிய அதிகாரிகளிடம் காலதாமதமின்றி கொண்டு சோ்த்து, குறித்த காலத்தில் தீா்வு வழங்குவதற்கும் ஏதுவாக 24 மணிநேரமும் செயல்படும் வாட்ஸ்ஆப் சேவை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தச் சேவையைப் பெற வாட்ஸ்ஆப் செயலியில் 94987 94987 என்ற எண்ணுக்கு ‘ஏஐ’ எனப் பதிவிட வேண்டும். இதையடுத்து, தொலைபேசி எண் அல்லது மின் இணைப்பு எண் மூலம் புகாா் குறித்த விவரங்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உடனடியாக அனுப்பப்பட்டு, புகாரை சீா் செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்த தானியங்கி புகாா் அளிக்கும் வசதியின் மூலம் பொதுமக்கள் மேலும் எளிதாகவும், விரைவாகவும் மின்சார சேவைகளைப் பெறவும் உதவிகரமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

WhatsApp number to lodge complaints regarding electricity services

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.