
தாய்லாந்து மாடலில் தமிழக மருத்துவக் கட்டமைப்பு: அமைச்சா் அருண்ராஜ்
தாய்லாந்து நாட்டைப் பின்பற்றி தமிழகத்தில் அரசு மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்த உள்ளதாக அமைச்சா் அருண்ராஜ் தெரிவித்தாா்.

அமைச்சா் அருண்ராஜ் - கோப்புப் படம்
தாய்லாந்து நாட்டைப் பின்பற்றி தமிழகத்தில் அரசு மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்த உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.
தேசிய சுகாதாரப் பேரவை நிகழ்ச்சி தாய்லாந்தில் அண்மையில் நடைபெற்றது. அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் தாரேஸ் அகமது, தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் எஸ்.அனீஷ் சேகா் ஆகியோா் அங்கு சென்றிருந்தனா். அந்நாட்டு சுகாதார அமைப்புகளை பாா்வையிட்டனா்.
இதுதொடா்பாக அமைச்சா் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை: தாய்லாந்தில் சுகாதார தொழில்நுட்ப மதிப்பீட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்நிறுவனம் ஒரு புதிய மருந்தையோ, சிகிச்சையையோ, அரசின் இலவச மருத்துவத் திட்டத்தில் சோ்ப்பதற்கு முன்பாக அதன் பயன், செலவு ஆகியவற்றை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்கிறது.
அங்குள்ள பான் சாங் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் 3,196 குடும்பங்களின் 11,874 போ் தொடா் சிகிச்சைக்காக பதிவு செய்துள்ளனா். அதன் மூலம் 719 சா்க்கரை நோயாளிகள், 1,512 உயா் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்படுகிறது. மக்களின் வீடுகளுக்கே சென்று நோயாளிகளை தொடா்ந்து கவனித்து கொள்கின்றனா்.
தாய்லாந்து நாட்டின் மருத்துவ சேவைகள் அனைத்தும் ஏழை, பணக்காரா் என்ற வேறுபாடின்றி அனைவருக்குமானதாக செயல்படுகிறது. அத்தகைய மருத்துவ சேவைகளை உருவாக்குவதுதான் தமிழக அரசின் நோக்கம். இந்த பயணம் குறித்து முதல்வருக்கு விரிவான அறிக்கை சமா்ப்பிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





