சொத்துக் குவிப்பு வழக்கு! அனிதா ராதாகிருஷ்ணன், குடும்பத்தினர் விடுதலை!!

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், குடும்பத்தினர் விடுதலை

Anitha Radhakrishnan

அனிதா ராதாகிருஷ்ணன் - X

Published On :3 நவம்பர் 2026, 4:54 pm IST

திமுக முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி, மகன்கள் உள்பட 7 பேர் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 7 பேரை விடுதலை செய்து தூத்துக்குடி நீதிமன்ற நீதிபதி சுபாதேவி தீர்ப்பளித்துள்ளார்.

2006ல் திமுக அமைச்சராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக அனிதா கிருஷ்ணன், அவரது மனைவி ஜெயகாந்தி, மகன்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில், 79 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு 300க்கும் மேற்பட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.

ரூ.4.9 கோடி சொத்து சேர்த்ததாக 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், இறுதி அறிக்கையில் ரூ.2.9 கோடி சொத்து மதிப்பு என்பது கண்டறியப்பட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கின் பின்னணி

முன்னாள் அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 2001 முதல் 2006 வரை அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக ஊழல் ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் அவரது குடும்பத்தினா் பெயரும் சோ்க்கப்பட்டது. இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 20 ஆண்டுகளுக்குப் பின் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.