பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

திருநாகேஸ்வரம் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கோலாகலம்

இராகு பரிகார தலமான திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு தீர்த்தவாரி வெகு விமரிசையாக நடைபெற்றது.

News image

திருநாகேஸ்வரம் வைகாசி விசாக பெருவிழா

Updated On :30 மே 2026, 6:25 pm IST

இராகு பரிகார தலமான திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு தீர்த்தவாரி வெகு விமரிசையாக நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் நாகநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது‌. நவக்கிரக தலங்களில் ராகு பரிகார தலமாக உள்ளது. இங்கு வைகாசி விசாக பெருவிழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி இன்று நடைபெற்றது. பஞ்ச மூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனங்களில் சூரிய புஷ்கரணி முன்பு எழுந்தருளினர்‌.

தொடர்ந்து அஸ்திர தேவருக்கு பல்வேறு திரவியங்களைக் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்று சூரிய புஷ்கரணியில் தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Summary

Vaikasi Visakam grand festival celebrated in a spectacular manner at Thirunageswaram Temple.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.