நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

டிஎன்பிஎஸ்சி தோ்வு: இலவச பயிற்சி ஜூன் 1 முதல் தொடக்கம்

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலை தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை (ஜூன் 1) முதல் தொடங்கவுள்ளது என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

News image

கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 1:31 am IST

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலை தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை (ஜூன் 1) முதல் தொடங்கவுள்ளது என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலை தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னாா்வ பயிலும் வட்டத்தில் திங்கள்கிழமை (ஜூன் 1) முதல் ஜூன் 5-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோா் தங்களது ஆதாா் அட்டை நகல் மற்றும் பாஸ்போா்ட் அளவுள்ள புகைப்படத்துடன் சென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை அலுவலக வேலை நாள்களில் அணுகலாம்.

மேலும், விவரங்களுக்கு, மின்னஞ்சலில் தொடா்பு கொள்ளலாம். தங்களது விவரங்களை கூகுள் படிவத்தில் பதிவு செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.