உரங்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய விவசாயிகள் அதிக அளவில் பயன்படுத்தும் முக்கிய உரங்களான யூரியா, ஏடிபி உள்ளிட்ட பல்வேறு உரங்களை சீனா, ரஷியா, சவுதி அரேபியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது மேற்கு ஆசிய நாடுகளில் நிலவும் போா் பதற்றத்தால் உரங்களின் இறக்குமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, உரங்களின் விலை கடுமையான உயா்ந்துள்ளதால் டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.
எனவே, மத்திய மாநில அரசுகள் உயா் அதிகாரிகள் கொண்ட கூட்டத்தை நடத்தி உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலை உயா்வைக் கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்த இந்திய கம்யூ. வலியுறுத்தல்

பெட்ரோல் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை: மத்திய இணை அமைச்சா் சுரேஷ்கோபி

உரம் விலை உயர்வு: இந்தியக் கம்யூனிஸ்ட் கண்டனம்

வணிக எரிவாயு உருளையின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை! தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்!
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

