பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதைப் பற்றி...

News image

மழை - பிரதிப் படம்

Updated On :29 மே 2026, 8:13 am IST

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடைக்காலத்தில் மிக முக்கியமான அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெய்யில் காலம் மே 4-ஆம் தேதி தொடங்கியது. சென்னை உள்பட பல மாவட்டங்களில் வெப்பநிலை உச்சம் தொட்டது. ஒரு சில நாள்களாக 110 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி மக்களை வாட்டி வைத்தது.

இந்த நிலையில், கோடையைக் குளிர்விக்கும் வகையில் வளிமண்டல சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி மற்றும் காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் என்றும், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தேனி, திண்டுக்கல், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Summary

The Chennai Meteorological Centre has stated that rain will continue in Chennai for the next two hours, until 10:00 AM on Friday morning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.