அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலோர கர்நாடக பகுதிகளில் இருந்து கடலோர ஆந்திர பகுதிகள் வரை வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதன் காரணமாக, செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) முதல் ஜூன் 13 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தருமபுரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்துக்கு (காலை 10 மணி வரை) நீலகிரி, தென்காசி, தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
The Chennai Regional Meteorological Centre has stated that there is a possibility of rain in six districts over the next two hours.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அடுத்த 2 மணி நேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 8 மாவட்டங்களில் மழை!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை


