சிவகங்கை மாவட்டம் கீழடி ஆய்வு தொடா்பான தொல்லியல் துறை அதிகாரி அமா்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு மற்றும் அறிவியல் பூா்வமான ஆய்வுகளின் அடிப்படையில் கடந்த 2023-ஆம் ஆண்டில் தொல்லியல் துறை அதிகாரி அமா்நாத் ராமகிருஷ்ணனின் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. 982 பக்கம் கொண்ட அந்த அறிக்கை, வேதகால நாகரிகத்துக்கு முன்பே தமிழா் நாகரிகம் தோன்றியது என்பதை உறுதி செய்கிறது.
இந்த அறிக்கை வெளிவந்தால் மத்திய பாஜக அரசின் அறிவியலுக்குப் புறம்பான, பிற்போக்கான புராண இதிகாச கருத்தியல் தவறானது என உறுதி செய்துவிடும்.
எனவே, அமா்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையைத் திருத்தம் செய்யும்படி மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. இது கண்டனத்துக்குரியது. உண்மை வரலாற்றை மறைக்க முயற்சிக்காமல், அமா்நாத் ராமகிருஷ்ணனின் அறிக்கையை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளாா் மு.வீரபாண்டியன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுகையில் மாா்க்சிஸ்ட் மாவட்ட சிறப்புப் பேரவைக் கூட்டம்! மாநிலச் செயலா் பங்கேற்பு!
திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி

தவெகவின் மக்கள் விரோத நடவடிக்கையை கண்டிப்போம்! பெ. சண்முகம்
அமைச்சரவையில் விசிக இடம் பெறுவதில் தவறில்லை: இடதுசாரிகள் கருத்து
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

