பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

திருச்சி கிழக்கு தொகுதியில் திரிஷா போட்டியிட்டால் என்ன தவறு? வனிதா விஜயகுமார்

திருச்சி கிழக்கு தொகுதியில் திரிஷா போட்டியிட்டால் என்ன தவறு என்று வனிதா விஜயகுமார் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

News image

வனிதா - File photo

Updated On :22 மே 2026, 4:49 pm IST

திருச்சி கிழக்கு தொகுதியில் திரிஷா போட்டியிட்டால் என்ன தவறு? வனிதா விஜயகுமார்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முதல்வர் ஜோசப் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்குத் தொகுதியை அவர் ராஜிநாமா செய்த நிலையில், அங்கு திரிஷா போட்டியிட்டால் என்ன தவறு என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் வனிதா விஜயகுமார்.

உண்மையிலேயே தவெக சார்பில் திருச்சி கிழக்குத் தொகுதியில் நடிகை திரிஷா போட்டியிடுவது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக ஒரு தகவல்கூட வெளியாகவில்லை.

ஆனால், அதனை எதிர்த்தும் ஆதரித்தும் பலரும் பேசி வருகிறார்கள்.

அதுபோலவே, நடிகை வனிதா விஜயகுமாரும் திரிஷா அரசியலில் நுழைவதற்கு ஆதரவு தெரிவித்து கருத்தகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

அவர் அண்மையில் பேசுகையில், தவெக சார்பில் நடிகை திரிஷா வேட்பாளராக நிறுத்தப்படுவதாகப் பரவிய வதந்திகளை நையாண்டி செய்து சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகளைக் குறிப்பிட்டு, திரிஷா அரசியலில் நுழைவதை ஏன் தவறாகக் கருத வேண்டும் என்று வனிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா படித்த அதே பள்ளியில்தான் திரிஷா படித்திருக்கிறார், சரளமாக ஆங்கிலம் பேசக்கூடியவர், மக்களிடம் மரியாதையுடன் பழகக்கூடியவர் என அரசியலுக்குத் தேவையான தகுதிகள் அவரிடம் இருப்பதாகவே தான் கருதுவதாகவும் வனிதா கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், நடிகை திரிஷாவைப் போன்றவர்கள் அரசியலில் நுழைய வேண்டும் என்றும் வனிதா வலியுறுத்தியிருக்கிறார்.

ஏற்கனவே நடிகை திரிஷா அரசியலில் நுழைவது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகாத நிலையில், தனிப்பட்ட கருத்துகளை வனிதா விஜயகுமார் முன்வைத்துள்ளார்.

Summary

What is wrong if Trisha contests from Trichy East Vanitha

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.