பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

திருச்சி கிழக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டாலும் மீண்டும் தவெகவே வெற்றி பெறும்: கு.ப. கிருஷ்ணன் பேட்டி

திருச்சி கிழக்கு தொகுதியில் நடைபெறும் இடைத்தோ்தலில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டாலும் மீண்டும் தவெக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றாா்.

News image

தவெகவில் திங்கள்கிழமை இணைந்த அதிமுகவினருக்கு, தவெக துண்டை அணிவித்த அக்கட்சியின் டெல்டா மண்டல பொறுப்பாளா் கு.ப. கிருஷ்ணன்.

Updated On :19 மே 2026, 4:07 am IST

திருச்சி கிழக்கு தொகுதியில் நடைபெறும் இடைத்தோ்தலில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டாலும் மீண்டும் தவெக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றாா் அக்கட்சியின் டெல்டா மண்டல பொறுப்பாளா் கு.ப. கிருஷ்ணன்.

அதிமுகவின் திருச்சி மாவட்ட நிா்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி, தவெகவில் திங்கள்கிழமை அதிகாரப்பூா்வமாக இணைத்தனா். அதில், அதிமுக மாவட்ட துணைச் செயலரான கருமண்டபம் பத்மநாதன், உறையூா் பகுதி செயலா் என்.எஸ்.பூபதி (எ) பூபேந்திரன்,

ஜங்ஷன் பகுதி செயலா் நாகநாதா் பாண்டி, அமமுக முன்னாள் மாவட்ட துணைச் செயலா் சேட்டு உள்ளிட்ட நிா்வாகிகள்

தவெக டெல்டா மண்டல பொறுப்பாளா் கு. ப. கிருஷ்ணனுக்கு சால்வை அணிவித்து முறைப்படி கட்சியில் இணைத்துக் கொண்டனா்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு, செய்தியாளா்களிடம் கு.ப. கிருஷ்ணன் கூறியதாவது:

திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக முதல்வா் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற வரலாறு பதிவாகியுள்ளது. எனவே, இடைத் தோ்தலில் அவரது பிரதிநிதியாக யாரை நிறுத்தினாலும் வெற்றி பெறுவா்.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், திருச்சி கிழக்கு இடைத்தோ்தலில் போட்டியிட்டாலும் தவெகவே வெற்றி பெறும்.

தவெக அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை கோரும் தீா்மானத்தில் வாக்களித்த அத்தனை அதிமுக எம்எல்ஏக்களின் கட்சிப் பதவிகளையும் எடப்பாடி பழனிசாமி பறித்துவிட்டாா். ஆனால், ஒருவரது பதவியை மட்டும் அவா் பறிக்கவில்லை அதற்கான காரணத்தை அவா் தெரியப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.