தமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

திரிஷ்யம் 3: முதல் நாள் வசூல் எவ்வளவு?

திரிஷ்யம் 3 திரைப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் ரூ. 40 கோடிக்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்துள்ளது.

News image

திரிஷ்யம் 3 போஸ்டர்

Updated On :22 மே 2026, 5:07 pm IST

திரிஷ்யம் 3 திரைப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் ரூ. 40 கோடிக்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்துள்ளது.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் உலகம் முழுவதும் நேற்று வெளியான படம் 'திரிஷ்யம் 3' . படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதிலும் படம் உலகளாவிய பாக்ஸ் ஆபீஸில் ரூ. 43.37 கோடி வசூல் செய்துள்ளது.

இந்திய பாக்ஸ் ஆபீஸில் மட்டும் படம் மொத்தம் ரூ. 18.37 கோடி வசூலித்துள்ளது.

திரைப்பட வசூலைக் கண்காணிக்கும் 'சாக்னில்க்' இணையதளத்தின்படி, படத்தின் வெளிநாட்டு வசூல் ரூ. 25 கோடியாக உள்ளது.

திரிஷ்யம் திரைப்படம் முதன்முதலில் 2013-ல் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியானது.

அதன் இரண்டாம் பாகம் 2022-ல் வெளிவந்தது. இதற்கு முந்தைய பாகங்களையும் ஜீத்து ஜோசப் தான் இயக்கியிருந்தார். தனது படத்திற்கு கிடைத்த வரவேற்பிற்காக ரசிகர்களுக்கு நடிகர் மோகன்லால் நன்றி தெரிவித்துள்ளார்.

Summary

"Drishyam 3", faturing Malayalam superstar Mohanlal, has earned Rs 43. 37 crore at the worldwide box office.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.