பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ரூ. 200 கோடியை நெருங்கும் மோகன்லாலின் திரிஷ்யம் - 3!

திரிஷ்யம் - 3 திரைப்பட வசூல் குறித்து...

News image

திரிஷ்யம் - 3 போஸ்டர் - Dinamani

Updated On :27 மே 2026, 5:58 pm IST

நடிகர் மோகன்லாலின் திரிஷ்யம் - 3 திரைப்படம் ரூ. 200 கோடியை நெருங்கியுள்ளதாம்.

நடிகர் மோகன்லால் இயக்குநர் ஜீத்து ஜோசஃப் கூட்டணியில் உருவான திரிஷ்யம் திரைப்படத் தொடரின் மூன்றாம் பாகம் வியாழக்கிழமை வெளியானது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கும் விதமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆச்சரியப்படும் விதமாக 58 மணி நேரத்தில் இப்படம் ரூ. 100 கோடியை வசூலித்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்த நிலையில், இப்படம் வெளியான 6 நாள்களிலேயே ரூ. 170 கோடிக்கும் அதிகமாக வசூலித்துவிட்டதாகவும் கேரளத்தில் மட்டும் ரூ. 50 கோடியைக் கடந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எம்புரானைத் தொடர்ந்து மிக வேகமாக ரூ. 100 கோடி வசூலைப் பெற்ற படமாக திரிஷ்யம் - 3 மாறியுள்ளதால் இந்தாண்டின் அதிகம் வசூலித்த மலையாளப் படம் பட்டியலில் இடம்பிடிக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

Actor Mohanlal's film Drishyam 3 is reportedly nearing the ₹200 crore mark.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.