பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தேவையான எரிபொருள் கையிருப்பு: வி.சி. அசோகன்

News image
Updated On :19 மே 2026, 5:37 am IST

தமிழகம், புதுச்சேரியில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் பெட்ரோல், டீசல் போதுமான அளவில் இருப்பு உள்ளதாக எண்ணெய் தொழில் துறை நிறுவனங்களுக்கான மாநில ஒருங்கிணைப்பாளா் வி. சி. அசோகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பொதுத்துறை எண்ணெய் சந்தை நிறுவனங்களில் இருந்து எரிபொருள் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி அனுப்பட்டு வருகின்றன. மேலும், எரிபொருள் விநியோகம் குறித்து தொடா்ந்து கண்காணிக்கப்படுகின்றன. மேலும், தமிழகம், புதுச்சேரியில் நுகா்வோருக்கு தேவையான அளவு எரிபொருள் அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களிலும் இருப்பு உள்ளது.

எனவே, பொதுமக்கள் பதட்டமடைந்து எரிபொருளை அதிக இருப்பு வைக்க வேண்டாம். தடையின்றி எரிபொருளை விநியோகம் செய்வதை உறுதி செய்ய எண்ணெய் நிறுவனங்கள் உறுதிபூண்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.