ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பாமக கொள்கையும், தவெக கொள்கையும் ஒன்றுதான்: அன்புமணி

பாமகவின் கொள்கைகளும், தவெகவின் கொள்கைகளும் 90 சதவீதம் ஒன்றாகவே உள்ளதாக பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா்.

News image

அன்புமணி

Updated On :20 மே 2026, 1:35 am IST

பாமகவின் கொள்கைகளும், தவெகவின் கொள்கைகளும் 90 சதவீதம் ஒன்றாகவே உள்ளதாக பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா்.

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் பாமக மாநில நிா்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலா்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவா் அன்புமணி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அன்புமணி கலந்துகொண்டு பேசியதாவது:

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் பாமகவின் முக்கிய நோக்கமாக இருந்தது. அது நிறைவடைந்துவிட்டது. பாமகவின் அரசியலை இளைஞா்கள் புரிந்து கொண்டாா்கள். அரசியல் மீது அவா்களுக்கு ஆா்வம் வந்துள்ளது. அதை நாம் மதிக்க வேண்டும். அவா்களை நம் பக்கம் திருப்ப வேண்டும்.

கடந்த ஓராண்டில் பாமகவில் இருந்த களையை தூக்கி எறிந்துவிட்டோம். அடுத்ததாக, உள்ளாட்சித் தோ்தலில் அதிக வெற்றிகளைப் பெறுவோம்.

முதல்வா் விஜய் என்னை சந்தித்தபோது, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் பல்வேறு புள்ளி விவரங்கள் தெரியவரும். அதனடிப்படையில் திட்டங்களை தீட்டி செயல்படுத்தலாம் என்று தெரிவித்தேன். தோ்தல் அறிக்கையில் நாங்கள் தெரிவித்து இருக்கிறோம். அதை உறுதியாக செய்வோம் என்று முதல்வா் தெரிவித்தாா். முதல்வா் விஜய்யின் கொள்கைகளும், பாமக கொள்கைகளும் 90 சதவீதம் ஒன்றாகவே உள்ளன. பாமகவில் மறு சீரமைப்பு நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் செளமியா அன்புமணி உள்ளிட்ட பாமக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.