பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்: டிடிவி தினகரன்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் திரும்பப் பெற வேண்டும் என அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

News image

டிடிவி தினகரன் - கோப்புப்படம்.

Updated On :15 மே 2026, 5:20 pm IST

பெட்ரோல், டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் திரும்பப் பெற வேண்டும் என அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், உலகளவிலான சந்தையில் கச்சா எண்ணெயின் தொடர் விலையேற்றத்தால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், இயற்கை எரிவாயு விலை 2 ரூபாயும் நேற்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டு புதிய விலை அமலுக்கு வந்துள்ளன.

வளைகுடா நாடுகளில் நீடிக்கும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் கொண்டுவருவதில் ஏற்பட்ட தடங்கலும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிதி இழப்பாலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்றாலும், அதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏழை, எளிய மக்கள் பல்வேறு விதமான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுப் போக்குவரத்திற்கான செலவோடு, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்து அவர்களுக்கு பல்வேறு விதமான பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்தும் என்பதையும் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் திரும்பப் பெறுவதை உறுதி செய்திட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.