பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னையில் நாளை (மே 20) இடதுசாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளது குறித்து...

News image

பெட்ரோல், டீசல் நிரப்ப அலைமோதிய கூட்டம் - பிடிஐ

Updated On :19 மே 2026, 9:07 pm IST

மோடி அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை (மே 20) சென்னையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் சிபிஐ (எம்), சிபிஐ, சிபிஐ(எம்.எல்) விடுதலை ஆகிய இடதுசாரி கட்சிகளின் சார்பில் நாளை (20.05.2026) தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

சென்னையில் நாளை காலை 10 மணிக்கு மிண்ட் (வள்ளலார் நகர்) அருகில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு. வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை மாநில செயலாளர் பழ. ஆசைதம்பி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றவுள்ளனர்.

நாட்டில் கடந்த வாரம் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக ரூ. 3 வரை உயர்த்தப்பட்டது. இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலை ஏற்றம் அடையும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், இன்று மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மேற்காசிய போர் காரணமாக, தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 82 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 86 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ. 104.49 ஆகவும், டீசல் விலை லிட்டர் ரூ. 96.11க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Summary

Protest in Chennai tomorrow condemning the hike in petrol and diesel prices

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.