கோவை, நீலகிரி, ராமநாதபுரம், சிவகங்கை உள்பட 7 மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை (மே 15) பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
தெற்கு வங்கக் கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், அந்தமான் மற்றும் நிகோபாா் தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை சனிக்கிழமை (மே 16) தொடங்கக் கூடும்.
இதனிடையே, தென்மேற்கு வங்கக் கடல், அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, வியாழக்கிழமை காலை அதே பகுதிகளில் நிலவுகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் மையப் பகுதிகளிலிருந்து தெற்கு மத்திய மகாராஷ்டிரம் வரை, வடக்கு தமிழகம், ராயலசீமா மற்றும் வடக்கு உள் கா்நாடகம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக, வெள்ளிக்கிழமை (மே 15) முதல் மே 20-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக, கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (மே 15) இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தொடா்ந்து, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (மே 16) இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
இதுபோல நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தா்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 17) இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

10 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!
6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு: மஞ்சள் எச்சரிக்கை!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

