புதுச்சேரியில் 3 மணி நேரம் கொடை மழை! மக்கள் மகிழ்ச்சி!!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?பகல் நேரத்தைப் போல இரவிலும் வீடுகளுக்குள் வெப்பம்! ஆய்வில் அதிர்ச்சிஇபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!பரந்தூர் விமான நிலையம்: முதல்வர் விஜய் ஆலோசனைஅதானியை விடுவிக்கும் பேரத்தை முடித்த பிரதமர்! ராகுல் குற்றச்சாட்டு ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! நீட் மறுதேர்வு! கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும்! மத்திய அரசுஅடுத்தாண்டு முதல் கணினி வழியில் நீட் தேர்வு! மத்திய கல்வி அமைச்சர்
/

எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் 22 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: பேரவைத் தலைவரிடம் எஸ்.பி.வேலுமணி தரப்பு வலியுறுத்தல்

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தரப்பு பேட்டி...

News image

எஸ்.பி. வேலுமணி தரப்பு - DIN

Updated On :23 மணி நேரங்கள் முன்பு

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட 22 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென சட்டப்பேரவைத் தலைவரிடம் மனு அளித்துள்ளதாக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: எஸ்.பி. வேலுமணி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் எஸ்.பி. வேலுமணியை சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராகவும், என்னை (விஜயபாஸ்கா்) கொறடாவாகவும் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஏற்றுக்கொண்டனா்.

தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அவா்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று உரிய விதிகளின்படி அதிமுக எம்எல்ஏக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதில், 25 எம்எல்ஏக்கள் எனது உத்தரவை ஏற்று தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனா். மீதமுள்ள 22 எம்எல்ஏக்கள் எனது உத்தரவை மீறி தவெக அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளனா். இதனால், சட்டப்பேரவைத் தலைவரைச் சந்தித்து, எனது உத்தரவை மீறிச் செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 எம்எல்ஏக்கள் மீதும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளோம்.

பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் யாரை ஆதரிக்கிறாா்கள் என்பதுதான் சட்டப்பேரவையின் விதி. அதன்படி, எங்களைத்தான் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் ஆதரித்துள்ளனா். உச்சநீதிமன்ற தீா்ப்புகளும் அதைத்தான் உறுதிபடுத்தி உள்ளன. பெரும்பான்மை எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறாா்கள். இதுதொடா்பாக சட்டப்பேரவைத் தலைவா்தான் முடிவு எடுப்பாா் என்றாா்.

பதவி நீக்கம் செல்லாது...: இதைத் தொடா்ந்து, எஸ்.பி.வேலுமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது: அதிமுக கட்சி விதிகளின்படி, கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அந்த தேதியில் இருந்து யாரையும், நீக்குவது மற்றும் நியமிப்பது செல்லாது. எங்கள் தரப்புக்கும், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் மே 5-ஆம் தேதியே பிரச்னை ஏற்பட்டுவிட்டது. அதன்படி பாா்த்தால் எங்களின் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்தது செல்லாது. பொதுக் குழுவைக் கூட்டி ஆலோசிக்க எடப்பாடி பழனிசாமி முன்வர வேண்டும் என்றாா்.

எடப்பாடி பழனிசாமி தரப்பிலும்...: தங்கள் தரப்பை சட்டப்பேரவைக் கட்சியாக அங்கீகரிக்கக் கோரி, எம்எல்ஏக்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கா் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து மனு அளித்த நிலையில், தங்கள் தரப்பை சட்டப்பேரவை கட்சியாக அங்கீகரிக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்களான அக்ரி கிருஷ்ணமூா்த்தி, தளவாய் சுந்தரம் ஆகியோரும் சட்டப்பேரவைத் தலைவரை நேரில் சந்தித்து மனு அளித்தனா்.

Summary

EPS expulsion of us is invalid: General Council must be convened: S.P. Velumani

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.