ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலுக்கு அரசுப் பதவி வழங்கிய நியமன உத்தரவை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றது.
தவெக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான ஜோசப் விஜய்யின் தனிப்பட்ட ஜோதிடரரான ரத்தன் பண்டிட்டை, முதல்வரின் சிறப்புப் பணி அலுவலராக (அரசியல்) நியமனம் செய்வதாக செவ்வாய்க்கிழமை அரசாணை வெளியிடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கண்டனத்தை பதிவு செய்ததுடன், உடனடியாக அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு வலியுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை தமிழ்நாடு சட்டப்பேரவையில் விசிக எம்.எல்.ஏ. வன்னி அரசு, தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் ஜோதிடருக்கு அரசுப் பதவி வழங்கியதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
எதிர்க்கட்சிகள் உரைக்கு பதிலளித்து பேசுகையில், அவர்களின் கருத்துகள் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் விஜய் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, ஜோதிடர் ரத்தன் பண்டிட்டின் நியமனத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வில் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் அவசர வழக்காக விசாரிக்க மனு அளித்திருந்தார்.
இந்த நிலையில், சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிறைவடைந்தவுடன், ரத்தன் பண்டிட்டுக்கு அரசுப் பதவி வழங்கிய நியமன அரசாணையை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெறும் 24 மணிநேரத்துக்குள் பணி நியமன அரசாணையை முதல்வர் விஜய் திரும்பப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

திரும்பப் பெற்ற அரசாணை
Summary
Astrologer Rathan Pandit's Government Appointment Order Withdrawn
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வரின் ஜோதிடருக்கு அரசுப் பதவி! அறிவியல் இயக்கம் கண்டனம்!

தவெகவில் குதிரை பேரம்; ஜோதிடருக்கு எதற்கு அரசுப் பதவி? பிரேமலதா

முதல்வர் விஜய்யின் ஜோதிடர் ரத்தன் பண்டிட்டுக்கு அரசுப் பதவி!!

யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

