சென்னை : தமிழக அரசின் நிர்வாகத்தில் சில முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பான அரசாணையை தமிழக அரசின் தலைமை செயலர் எம். சாய் குமார் இன்று (மே 12) மாலை வெளியிட்டார்.
அதில், முன்னாள் தலைமை செயலரான முருகானந்தம், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலாளர் / நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டார்.
நிதித்துறை செயலராக இருந்த டி. உதயசந்திரன் மாற்றப்பட்டு, எம். ஏ. சித்திக் நிதித்துறை கூடுதல் தலைமை செயலராக நியமிக்கப்பட்டார்.
டாஸ்மாக் மேலாண்மை இயக்குநராக இருந்த டி. கிறிஸ்துராஜ் மாற்றப்பட்டு கே. நந்தகுமார் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டார். சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை முதன்மை செயலராக டாக்டர் எஸ். ஸ்வர்ணா நியமிக்கப்பட்டார்.
முதல்வரின் கூடுதலாக செயலராக விஷ்ணுவும் முதல்வரின் 3-ஆவது முதன்மை செயலராக அண்ணாதுரையும் நியமிக்கப்பட்டனர்.
முதல்வரின் தனிச் செயலாளர் - 3 என்றதொரு புதிய பொறுப்பில் விஷ்ணு நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே முதல்வரின் தனிச்செயலராக செந்தில் குமார் மற்றும் லட்சுமி பிரியா ஆகியோர் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary
IAS Officers Transferred!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! பொதுப்பணித்துறை செயலராக செல்வராஜ்

கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!

தலைமைத் தோ்தல் அதிகாரியாக இருந்தவா் கேரள முதல்வரின் செயலராக நியமனம்: எதிா்க்கட்சிகள் விமா்சனம்

9 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
விடியோக்கள்

காதல் செய்வீர் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

ஆல்பா படத்தின் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

