தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகருக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஜோசப் விஜய் முதல்முறையாக பேரவையில் உரையாற்றியுள்ளார்.
தமிழ்நாட்டின் 17-வது சட்டப்பேரவையின் தலைவராக ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றி இன்று தேர்வு செய்யப்பட்டார்.
அவரை அவை முன்னவர் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அவைத் தலைவர் இருக்கைக்கு அழைத்துச் சென்று அமரவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை வாழ்த்தி அனைத்துக் கட்சிகளின் சார்பில் உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.
அனைவரும் பேசியதை தொடர்ந்து இறுதியாக முதல்வர் விஜய் பேசியதாவது:
”மக்களின் எதிர்பார்ப்புகளை பேரவைக்கு கொண்டு வந்து அதனை செயல்படுத்துவதற்காக திட்டங்களை சட்டங்களை அமல்படுத்தும் பொறுப்பு இந்த பேரவைக்கு உள்ளது. அதிகமான மக்கள் அதிக நன்மைகளை பெற்றுள்ளார்கள் என்ற வகையில் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். இங்கே அனைவரும் சமம்.
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிகள் இடம்பெற்றிருப்பவர்களின் கருத்துகளுக்கும், தவெக உறுப்பினர்களின் கருத்துகளுக்கும் சமமாக மதிப்பளிக்கப்பட்டு, நன்மைகள் ஏற்கப்பட்டு ஜனநாயகத்தின் இதயமாகவும், மூளையாகவும் இந்தப் பேரவை செயல்படும். அதற்குறிய வகையில் வரலாற்று சிறப்புமிக்க இந்த பேரவையை வழிநடத்தும் பன்பை பெற்ற தலைவரே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிப்பார்கள். பேரவையின் மாண்பையும் கண்ணியத்தையும் உறுப்பினர்களின் கண்ணியத்தையும் காக்கும் பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
"குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்" என்ற வள்ளுவரின் குரலுக்கு ஏற்ப, சட்டப்பேரவை நடவடிக்கைகள் சீராக, செம்மையாக அமைதியாக நடைபெறும் வகையிலும், சட்டப்பேரவை ஜனநாயக பண்புகள், ஜனநாயக நெறிகள் பேணிப் பாதுகாப்பதில் பேரவைத் தலைவரும் துணைத் தலைவரும் செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.” எனத் தெரிவித்தார்.
Summary
Equal Value Even for a One-Member Party! Chief Minister Vijay's Inaugural Address!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூய அரசியல் என்று சொல்லிவிட்டு அழுக்கு அரசியல் செய்கிறார் விஜய்! மு.க. ஸ்டாலின்
திருமாவளவனிடம் வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!

நாகரிக அரசியல் செய்யும் விஜய்: காதர் மொய்தீன் பாராட்டு!

ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

