தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்வார இறுதி விடுமுறை: 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆக. 25 முதல் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்துபொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

பேரவைத் தலைவராக ஜே.சி.டி. பிரபாகர், துணைத் தலைவராக ரவிசங்கர் தேர்வு!

சட்டப்பேரவைத் தலைவரானார் ஜே.சி.டி. பிரபாகர்.

tngovt

சட்டப்பேரவைத் தலைவரானார் ஜே.சி.டி. பிரபாகர். - படம்: தமிழக அரசு

Published On :12 மே 2026, 10:08 am IST

சட்டப்பேரவைத் தலைவராக ஜே.சி.டி. பிரபாகர், துணைத் தலைவராக ரவிசங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சட்டப்பேரவைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுதற்காக தவெக சார்பில், ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகர் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். அதேபோல, பேரவைத் துணைத் தலைவர் பதவிக்கு துறையூர் தொகுதி தவெக எம்எல்ஏ எம். ரவிசங்கர் மனு தாக்கல் செய்தார்.

பேரவைத் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தலுக்கு தவெக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள ஜே.சி.டி. பிரபாகர், எம்.ரவிசங்கர் ஆகியோருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.

இந்த நிலையில், சட்டப்பேரவைத் தலைவராக ஜே.சி.டி. பிரபாகர், துணைத் தலைவராக ரவிசங்கர் இருவரும் போட்டியின்றி இன்று(மே 12) தேர்வு செய்யப்பட்டனர்.

மரபுப்படி அவை முன்னவர் செங்கோட்டையன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆகியோர் ஜே.சி.டி. பிரபாகரை அழைத்துச் சென்று சட்டப்பேரவைத் தலைவர் இருக்கையில் அமர வைத்தனர்.

”உங்கள் அரசு தொடர எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் வாழ்த்தினார்.

”ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறும் அவையாக நீங்கள் இந்த அவையை வழிநடத்த வேண்டும்” என்று காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ்குமார் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி நியாயங்களை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் உறுப்பினர் வன்னிஅரசு கூறினார்.

சட்டப்பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.சி.டி. பிரபாகருக்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பேரவை உறுப்பினர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Summary

J.C.D. Prabhakaran has been elected as the Assembly Speaker, and Ravishankar as the Deputy Speaker.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.