கிருஷ்ணகிரி அருகே கார் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் கேரளத்தைச் சேர்ந்த இருவர் பலியாகினர்.
கேரளா மாநிலம், பட்டாம்பி பகுதியைச் சேர்ந்த வினித் என்பவர் அவரது குடும்பத்துடன் கர்நாடக மாநிலத்துக்கு சுற்றுலா சென்று கிருஷ்ணகிரி வழியாக ஊர் திரும்பினர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மே 11-ஆம் தேதி அதிகாலை குருபரப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது காரின் டயர் பஞ்சர் ஆனது.
பழுது நீக்கப்பட்டு தங்களது பயணத்தை தொடங்கிய போது பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி காரின் பின்பகுதியில் வேகமாக மோதியது. இதில், காரில் பயணித்த வணிக கப்பல் ஊழியரான தீபக் (28), மற்றும் அவரது சகோதரி திவ்யா( 30) ஆகிய இருவரும் பலியாகினர்.
மேலும் ரவிந்திரன் (57), ஶ்ரீ பார்வதி (54), வினித் (42), சரோஜினி (65), அபிந்தேவ் (11), அகில்தேவ் (8), ரம்யா (30) ஆகிய 7 பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து குருபரப்பள்ளி போலீஸார் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் பலியான இருவரின் உடல்களையும் மீட்டு கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீஸார், விசாரணை செய்து வருகின்றனர்.
Summary
Two members of the same family from Kerala were killed when a container lorry collided with their car near Krishnagiri.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிருஷ்ணகிரி அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி

நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து: 8 மாத கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி!
கிருஷ்ணகிரியில் இருவரை எரித்து கொலை செய்த வழக்கு: மேலும் சிலா் மீது புகாா்

கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை


