சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து: 8 மாத கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி!

லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது தொடர்பாக...

News image

விபத்தில் நொறுங்கி கிடக்கும் கார். - படம்: தினமணி

Updated On :23 மணி நேரங்கள் முன்பு

கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் 8 மாத கர்ப்பிணி உள்பட 3 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.

பெங்களூரில் இருந்து மதுரையை நோக்கி சொகுசு கார் ஒன்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணி அளவில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த ஈசநத்தம் சாலை பிரிவு பகுதியில் வந்து கொண்டிருந்தது.

காரை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நேதாஜி நகரைச் சேர்ந்த வீரா (40) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது சாலையின் குறுக்கே அரவக்குறிச்சி கலைவாணர் தெரு பாண்டித்துரை வயது (32) என்பவர் திடீரென தனது இருசக்கர வாகனத்தில் காரின் குறுக்கே வந்ததால், கார் அவர் மீது மோதாமல் இருக்க காரை சாலையோரம் திருப்பியபோது, கார் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே கார் ஓட்டுநர் வீரா மற்றும் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பூதிபுரம் ரோடு கருதி வீரன் பட்டியை சேர்ந்த அரவிந்த் (30), அவரது மனைவி ஜனனி 28) ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலியான ஜனனி 8 மாத கர்ப்பிணி ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அதே காரில் பயணம் செய்த வீராவின் மகன் அரவிந்த் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த பாண்டித்துரை (32) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியானவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காயமடைந்த இருவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary

Three people, including an eight-month-pregnant woman, died on the spot when a car collided with a stationary lorry near Aravakurichi in Karur district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.