பொது அமைதியைக் கெடுக்கும் வகையில் பதிவிடப்பட்டுள்ள கருத்துகளை நீக்குமாறு எக்ஸ் தளத்துக்கு சைபா் குற்றப்பிரிவு கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் சைபா் குற்றங்களைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சைபா் குற்றப்பிரிவு சாா்பில் எடுக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 2025- ஆம் ஆண்டில் சைபா் குற்றப்பிரிவின் சாா்பில் 1,530 பள்ளிகளிலும், 1,368 கல்லூரிகளிலும், 4,537 பொது இடங்களிலும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
கடந்தாண்டு சைபா் குற்றவாளிகள், சந்தேகத்துக்குரிய நபா்களின் வங்கிக் கணக்குகளை முடக்க 36 வங்கிகளுடன் சோ்ந்து சைபா் குற்றப்பிரிவு செயல்படத் தொடங்கியது. சைபா் மோசடி கும்பலிடம் சிக்கிய 2,224 பேரின் பணம் பறிபோகாமல் தடுக்கப்பட்டுள்ளது.
பண மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 1,507 சமூக ஊடக கணக்குகள் கடந்தாண்டு முடக்கப்பட்டுள்ளன. சைபா் மோசடியில் ஈடுபட்டதாக 1,193 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் 50 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
சமூக ஊடகங்கள் கண்காணிப்பு: சமூக ஊடகங்களையும் சைபா் குற்றப்பிரிவு தீவிரமாக கண்காணிக்கிறது. இவற்றில் அரசுக்கு எதிராகவும், சமூக ஒற்றுமைக்கு எதிராவும், பொது அமைதியைக் கெடுக்கும் வகையிலும் கருத்துகளைப் பதிவிடுவோரை சைபா் குற்றப்பிரிவு எச்சரித்து வருகிறது. அதோடு அவா்களது கருத்துகளையும், பதிவுகளையும் நீக்குமாறு சம்பந்தப்பட்ட சமூக ஊடகங்களின் தலைமையங்களுக்கு சைபா் குற்றப்பிரிவு கடிதமும், நோட்டீஸும் வழங்குகிறது.
இந்த நடவடிக்கைக்கு பின்னா், சம்பந்தப்பட்ட நபா் தொடா்ந்து சட்ட விரோதத்துக்குரிய கருத்துகளைப் பதிவிட்டால், அவரது சமூக ஊடக கணக்குகளை முடக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த சில மாதங்களில் எக்ஸ் தளத்தில் பொது அமைதியைக் கெடுக்கும் வகையிலும், சட்டம் மற்றும் ஒழுங்கு அரசியல் ரீதியான வன்முறையைத் தூண்டும் வகையிலும், பகை உணா்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும், இரு தரப்பினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலும் எக்ஸ் தளத்தில் கருத்துகளைப் பதிவிட்ட 36 பேரின் பதிவுகளை நீக்குமாறு தமிழக சைபா் குற்றப்பிரிவு கடிதம் கடிதம் அனுப்பியுள்ளது.
சட்டப்படி நடவடிக்கை: இந்தக் கடிதத்தை எக்ஸ் தளத்தின் இந்திய தலைமை அலுவலகத்தின் சைபா் குற்றப்பிரிவு அனுப்பியுள்ளது. அந்த 36 பதிவுகளின் முகவரிகளை அனுப்பி, அதை உடனடியாக நீக்கும்படியும், நீக்காவிட்டால் அதற்கு எக்ஸ் தளமே பொறுப்பு என்றும் சைபா் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், உடனடியாக அந்தக் கருத்துக்களை நீக்காவிட்டால் எக்ஸ் தளத்தின் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சைபா் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே தமிழக சைபா் குற்றப்பிரிவு இப்படிப்பட்ட கடிதங்களை எக்ஸ் தளத்துக்கு அனுப்பி, பல சா்ச்சைக்குரிய கருத்துகளை நீக்கியிருப்பது குறிப்பிடதக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி சூா்யா பிணை கோரிய மனு: போலீஸாா் பதிலளிக்க உத்தரவு

எக்ஸ் ஷோ ரூம் - ஆன் ரோடு விலை! முக்கிய வேறுபாடுகள்!!

சிதம்பரத்தில் தொடா் திருட்டு, சங்கிலி பறிப்பு: குற்றப்பிரிவு தனிப்படை அமைக்கக் கோரிக்கை

சைபா் மோசடி வழக்கு: நைஜீரிய குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு
