விஜய் ஒரு பேட்டி கொடுத்தால் எம்எல்ஏ பதவியை விட்டு விலகுகிறேன் என அமமுக எம்எல்ஏ காமராஜ் கூறியுள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அமமுக எம்எல்ஏ காமராஜ் இணைந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர்.
அமமுக எம்எல்ஏ காமராஜ் ஆதரவளித்ததாக ஆளுநரிடம் விஜய் போலிக் கடிதம் அளித்ததாக விஜய் மீது டிடிவி தினகரன் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதன்பின்னர் எம்எல்ஏ காமராஜ் பேசுகையில், "விஜய்க்கு பெரும்பான்மை இல்லை, அவர் ஏன் ஆட்சியமைக்க முயற்சி செய்ய வேண்டும்? அவரது கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றவர்களிடம் ஆதரவு கேட்கலாம். தீயசக்தி திமுகவுடன் கூட்டணியில் இருந்தவர்களிடம், அதிமுகவிடம் ஏன் ஆதரவு கேட்கிறார்கள்? எப்படியும் முதல்வராக வேண்டும் என்று முயற்சிக்கிறார்.
அமமுக ஆதரவு வேண்டும் என்றால் பொதுச் செயலாளரிடம் வந்துதானே பேச வேண்டும்?
விஜய்யைப் பார்த்து ஒரு பேட்டி எடுக்க முடியுமா? அப்படி விஜய் பேட்டி கொடுத்தால் நான் எம்எல்ஏ பதவியை விட்டு விலகுகிறேன்.
நான் இருந்த விடியோ போலியானது. நான் 25 நாள்களாக தேர்தல் பணியில் இருந்திருக்கிறேன். யாருக்காவது ஏதாவது எழுதியிருப்பேன்" என்று கூறினார்.
டிடிவி தினகரன் அந்த விடியோ ஏஐ-யாக இருக்கலாம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
If Vijay gives an interview, I will resign from my post as MLA: AMMK MLA Kamaraj
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிமுக-அமமுக இணைப்பு இல்லை: டிடிவி.தினகரன்

”MLA காமராஜை ஏற்றுக்கொண்டது தவறு!” டிடிவி தினகரன் பேட்டி

த.வெ.க.வை ஆதரித்துக் கையெழுத்திட்ட அமமுக எம்எல்ஏ! டிடிவி சொல்வது உண்மையா?
அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை


