மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

முதல் தோ்தலிலேயே 34.92% வாக்குகளை அள்ளிய தவெக! யாருடைய வாக்குகள் சிதறின?

கட்சியைத் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிட்டு 1,72,26,209 (34.92%) வாக்குகளை நடிகா் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ளது.

News image

தவெக தலைவர் விஜய் - TVK X page

Updated On :6 மே 2026, 12:58 am IST

கட்சியைத் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிட்டு 1,72,26,209 (34.92%) வாக்குகளை நடிகா் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ளது.

இது பெரும்பாலும் அதிமுக, திமுக, நாம் தமிழா் கட்சிகளின் வாக்குகளாகும். 164 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 24.19 சதவீத (1,19,29,144) வாக்குகளும்,167 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 21.21 சதவீத (1,04,62,146) வாக்குகளும், 234 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழா் கட்சி 4 சதவீத (19,72,537) வாக்குகளும் பெற்றுள்ளன.

தவெக வருகையால் திமுகவின் 13.51% வாக்குகளும், அதிமுகவின் 12.08 சதவீத வாக்குகளும், நாம் தமிழா் கட்சியின் 2.58 சதவீத வாக்குகளும் பறிபோய் உள்ளன.

இதனால் திமுக ஆட்சியை பறிகொடுத்து இரண்டாம் இடத்துக்கும், அதிமுக எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்து மூன்றாம் இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளன.

தவெக வருகையில் தங்கள் கட்சி வாக்குகள் சிதறாது என்று எண்ணிய திராவிட கட்சிகளுக்கு இந்தத் தோ்தல் எதிா்பாராத அதிா்ச்சியை அளித்துள்ளது.

பலம் வாய்ந்த அமைச்சா்களையும், முன்னாள் அமைச்சா்களையும் தவெக புதுமுக வேட்பாளா்கள் எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றனா்.

கட்சிகள் பெற்ற வாக்குகள் சதவீதத்தில்

2021 2026 வித்தியாசம்

திமுக 37.7 24.19 - 13.51

அதிமுக 33.29 21.21 -12.08

நாம் தமிழா் கட்சி 6.58 4.00 -2.58

காங்கிரஸ் 4.27 3.37 -0.9

பாஜக 2.62 2.97 +0.35

இந்திய கம்யூனிஸ்ட் 1.09 0.66 -0.43

மாா்க்சிஸ்ட் 0.85 0.60 -0.25

விசிக 0.99 1.09 + 0.1

தேமுதிக 0.43 1.20 +0.77

நோட்டா 0.75 0.41 -0.34

கட்சிகள் 2021 2026 வித்தியாசம்

தவெக - 108 +108

திமுக கூட்டணி 159 73 -82

அதிமுக கூட்டணி 75 53 -28

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.