தமிழகத்தில் காங்கிரஸ் தொடர்பான அடுத்தகட்ட முடிவுகளை எடுக்க தேசிய தலைமைக்கே அதிகாரம் என காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தவெக (தனிப்பெரும்பான்மை இன்றி) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆட்சியமைக்க காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவளிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 2 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர், யாருக்கு ஆதரவு உள்ளிட்டவை குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி காங்கிரஸ் வெளியிட்டுள்ள பதிவில்,
"நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் நிவேதித் ஆல்வா முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இரண்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்வு மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பான இறுதி முடிவுகளை எடுக்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு அதிகாரம் வழங்கி, ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது" என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கவில்லை.
கேரளத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது குறித்தும் அதேபோல தமிழகத்தில் தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்தும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டிருந்தார். இதில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த பதிவை ராகுல் 'பின்(pin) செய்து வைத்திருந்தது' வைரலானது. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் வழங்கப்பட்ட நிலையில் மயிலாடுதுறை, மேலூர், விளவங்கோடு, குளச்சல், கிள்ளியூர் ஆகிய 5 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Congress Support for TVK, AICC Will Decide: Congress MLA meeting resolutions
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கூட்டணி உறுதியானது! விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு!
தவெக ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெறும்! கிரிஷ் சோடங்கர்

தவெக தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், தலைவர்கள்!
தவெக ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் ஆதரவு?
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை



