சென்னை கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்திருந்தாலும், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இன்று மாலை 5.45 மணிக்கு கொளத்தூர் தொகுதிக்கு வந்துள்ளார்.
கொளத்தூருக்கு தன்னுடைய பிரசார வாகனத்தில் வந்த மு.க. ஸ்டாலின், தனக்காக வாக்களித்த மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார்.
நேற்று தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் இன்று மாலையே தலைவர்களில் முதல் ஆளாக மக்களுக்கு நன்றி தெரிவிக்க வந்துள்ளார் ஸ்டாலின்.
கொளத்தூர் தொகுதிக்கு வந்திருக்கும் மு.க. ஸ்டாலின், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் வந்து நன்றி தெரிவித்து வருகிறார். அவரை ஆயிரக்கணக்கான திமுகவினர் மு.க. ஸ்டாலினுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி வரவேற்றனர்.
அவருடைய வாகனத்தில் சேகர்பாபு நின்று கொண்டு வருகிறார். தோல்வியடைந்த நிலையிலும், தனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க வந்திருக்கும் ஸ்டாலினுக்கு மக்கள் அளித்த வரவேற்பைப் பார்த்து கண்கலங்கியபடியே வந்துகொண்டிருந்தார்.
கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்தார். 18 சுற்றுகளைக் கொண்ட வாக்கு எண்ணிக்கையில் ஒரே ஒரு சுற்று முடிவில் மட்டுமே திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலைக்கு வந்தார். தபால் வாக்குகளிலும் பின்தங்கியே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
MK Stalin came to Kolathur to express his gratitude! Volunteers shed tears!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!

கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி!
கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் பின்னடைவு!
கொளத்தூர் எனக்கு செல்லக் குழந்தை! முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


