திருச்சியில் ஏப்ரல் 2 ஆம் தேதி தவெக விஜய் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு பிரச்சாரத்துக்கு தவெக அனுமதி கோரியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று(மார்ச் 30) தொடங்கியது.
நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், முக்கிய அமைச்சர்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தவெக தலைவர் விஜய்யும் நேற்று பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடவுள்ள நிலையில் வருகிற ஏப். 2 ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்யவுள்ளார்.
ஏப்.2 ஆம் தேதி திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள பாலக்கரை மாநகராட்சி அலுவலகத்தில் நண்பகல் 12 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்யும் விஜய், அதன்பின்னர் அப்பகுதியில் பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.
திருச்சி கிழக்கில் பிரசாரம் செய்ய போதிய காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி தவெக தரப்பில் திருச்சி காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
Vijay Files Nomination in Trichy East on April 2: TVK Seeks Permission for Campaigning
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கில் த்ரிஷா போட்டியா?
தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் முன்னிலை; திருச்சி கிழக்கில் பின்னடைவு

ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


