தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளின் நிா்வாகிகளுடன் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை (ஏப். 3) பகல் 12 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளாா்.
இதுகுறித்து திமுக தலைமை அலுவலகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொகுதி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்த ஏதுவாக, ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியளவிலும் ஓரிடத்தில் தக்க ஏற்பாடுகளை மாவட்டச் செயலா்கள் மேற்கொள்ள வேண்டும். இக்கூட்டத்தில் மாவட்டச் செயலா்கள், திமுக வேட்பாளா்கள், பகுதி-நகரம்- ஒன்றியம்-வட்டச் செயலா்கள் மற்றும் வேட்பாளா்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பணியை திமுக விரைவுபடுத்தியுள்ளது. திமுக சாா்பில் வேட்பாளா் பட்டியல், தோ்தல் அறிக்கை வெளியிடப்பட்டதைத் தொடா்ந்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் தனது சுற்றுப்பயணத்தை திருவாரூரில் செவ்வாய்க்கிழமை தொடங்கினாா். இந்த நிலையில், அடுத்தகட்டமாக 234 தொகுதிகளின் நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யாருக்கு ஆதரவு? திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

முதல்வா் மு.க. ஸ்டாலின் நாளை புதுகை வருகை

முதல்வா் பிரசாரம்: அமைச்சா் ஆலோசனை

திமுக வேட்பாளா்கள், தொகுதி நிா்வாகிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
