மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வில்லிவாக்கத்தில் தவெக விஜய் பிரசாரம் ரத்து!

வில்லிவாக்கத்தில் தவெக விஜய்யின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...

News image

தவெக தலைவர் விஜய் பிரசாரம். - படம்: தவெக ஐடி விங்

Updated On :30 மார்ச் 2026, 4:27 pm IST

சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தவெக தலைவர் விஜய் மேற்கொள்ளவிருந்த தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வில்லிவாக்கத்தில் தவெக தலைவர் விஜய் மேற்கொள்ளவிருந்த பிரசாரம் ரத்து செய்யப்படுவதாக மாவட்டச் செயலாளர் பூக்கடை முருகன் அறிவித்துள்ளார்.

வில்லிவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலர் ஆதவ் அா்ஜுனாவுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் மேற்கொள்ளவிருந்த நிலையில் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அண்ணாநகர் தொகுதியில் மேற்கொள்ளவிருந்த பிரசாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் பிரசாரம் ரத்து செய்யப்படுவதாகவும் வேறொரு நாளில் உங்களை சந்திப்பார் எனவும் மாவட்டச் செயலாளர் பூக்கடை முருகன் தெரிவித்துள்ளார்.

மேலும், அங்கு கூடியிருந்தவர்களைக் கலைந்து செல்லவும் அறிவுறுத்தபட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்துக்கு, காவல் துறையினர் போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று குற்றம்சாட்டி வில்லிவாக்கம், அண்ணாநகர் தொகுதிகளின் பிரசாரத்தை தவெகவினர் ரத்து செய்துள்ளனர்.

தவெக தலைவர் விஜய், தனது தேர்தல் பிரசார பயணத்தை பெரம்பூரிலிருந்து இன்று தொடங்கினார். இதனைத் தொடர்ந்து கொளத்தூர் பேரவை தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வி. எஸ். பாபுவை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து, வில்லிவாக்கம், அண்ணாநகர் தொகுதிகளுக்கு பிரசாரம் மேற்கொள்ள வரவிருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Summary

The election campaign that TVK leader Vijay was scheduled to undertake in the Villivakkam constituency in Chennai has been cancelled.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.