சென்னை கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(மார்ச் 30) வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
234 தொகுதிகளுக்கு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறவுள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் சனிக்கிழமை (மார்ச் 28) அறிவிக்கப்பட்டன.
இதில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின், 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களைத் தொடர்ந்து தற்போது 4 ஆவது முறையாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னதாக, அவர் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

X/ ANI
இதையடுத்து 2026 தேர்தலில் திமுக சார்பில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். ஒருங்கிணைந்த மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரி சாந்தியிடம் வேட்புமனுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தொடர்ந்து அவர் நாளை(மார்ச் 31) முதல் தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சுமார் 70,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக அதிமுக சார்பில் சந்தானகிருஷ்ணன், தவெக சார்பில் வி.எஸ். பாபு, நாம் தமிழர் கட்சி சார்பில் சௌந்தர பாண்டியன் லூதர் சேத் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், எனக்கு மக்களின் ஆதரவு அமோகமாக உள்ளது. மக்கள் என்னை அமோக வெற்றி பெறச் செய்வார்கள் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின், ஜீப்பில் சாலை வலம் மேற்கொண்டு வருகிறார்.

X/ ANI
Summary
Chief Minister M.K. Stalin files nomination in Kolathur constituency
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி!
கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் பின்னடைவு!
கொளத்தூர் எனக்கு செல்லக் குழந்தை! முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!
கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


