புதுச்சேரியில் விஜய்யின் தேர்தல் பிரசாரத்துக்கு அனுமதிகோரி சட்டம்-ஒழுங்கு கண்காணிப்பாளரிடம் தவெக மனு அளித்துள்ளனர்.
புதுச்சேரியில் ஏப்ரல் 9 ஆம் தேதியில் சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான பணிகளில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. மேலும், தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொள்ளவிருக்கும் தேர்தல் பிரசாரத்துக்கு அனுமதிகோரி, மாநில சட்டம் - ஒழுங்கு முதுநிலை கண்காணிப்பாளரிடம் தவெக சார்பில் மனு அளித்துள்ளனர்.
மனுவின்படி, ஏப்ரல் 5 ஆம் தேதியில் புதுச்சேரியில் காலாப்பட்டு நுழைவாயில், முதியால்பேட்டை மணிகுண்டு, அதிதி ஹோட்டல் சந்திப்பு, உப்பளம் வாட்டர் டேங்க் உள்ளிட்ட பகுதிகளில் விஜய் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.
முன்னதாக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பெரம்பூர் தொகுதியில் மார்ச் 28 ஆம் தேதியில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள காவல்துறையில் அனுமதி கோரியிருந்தனர். ஆனால், 300 பேர் மட்டுமே கூடுவதற்கு உகந்த இடத்தில் 3,000 பேருக்கு அனுமதி தர முடியாது என தவெகவின் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
Summary
TVK Petitions for Permission for Vijay's Campaign in Puducherry!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொன்னேரி, அண்ணாநகரில் விஜய் இன்று பிரசாரம்!

விஜய் பிரசாரத்தில் விபத்து: தவெகவினர் 11 பேர் மீது வழக்கு!

நெல்லையில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி!
விஜய் பிரசாரத்திற்கு போதிய பாதுகாப்பு இல்லை! தேர்தல் அதிகாரியிடம் தவெக புகார்!!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

