தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தவெகவின் 234 வேட்பாளர்களையும் விஜய் இன்று அறிமுகம் செய்யவிருக்கிறார்.
தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பணிகளில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
மேலும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களையும் கட்சிகள் அறிமுகப்படுத்தி வருகின்றனர். அதிமுகவின் வேட்பாளர்களை இரண்டு கட்டங்களாக அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், திமுகவின் 164 வேட்பாளர்கள் பட்டியலையும் ஒரே கட்டமாக அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் சனிக்கிழமையில் வெளியிட்டார். முன்னரே, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தற்போது தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களை கட்சியின் தலைவர் விஜய் இன்று அறிமுகம் செய்து வைக்கிறார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழகத்தில் போட்டியிடும் 234 வேட்பாளர்கள் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 30 வேட்பாளர்களையும் விஜய் அறிமுகம் செய்கிறார்.
மேலும், வேட்பு மனு தாக்கல் நாளை (மார்ச் 30) தொடங்கப்படவுள்ள நிலையில், தவெகவின் அனைத்து வேட்பாளர்களையும் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
TN Assembly Elections: Vijay Introduces TVK Candidates Today!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆட்சியமைக்க அழைப்பாரா? ஆளுநரை மீண்டும் சந்திக்கிறார் விஜய்!

ஆளுநருடன் விஜய் இன்று சந்திப்பு?

இன்று பிற்பகல் ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!

அன்று முதல்வனை நிராகரித்த விஜய்... இன்று!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை


