தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து வெளியேறும் பெண்கள் மீது அவதூறு பரப்பப்படுவதுடன், களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவதாக திமுக நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து, செய்தியாளருடன் ரஞ்சனா நாச்சியார் பேசுகையில், “நான் முன்னதாக தவெகவில் இருந்தேன். ஆனால், பெண்கள் குறித்து ஏற்றுக்கொள்ள முடியாத சில கருத்துகளை அக்கட்சியின் தலைவர் மேடையில் கூறியதால், அக்கட்சியில் இருந்து வெளியேறினேன்.
கட்சித் தொண்டர்களைச் சந்திக்க அவர் ஒருபோதும் தயாராக இல்லை.
யூடியூப் விடியோக்கள் மூலம் தொடர்ந்து என் மீது அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததுடன், நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவதாக மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளேன். கட்சியைவிட்டு வெளியேறும் அனைத்து பெண்களும், மோசமான வார்த்தைகளால் அச்சுறுத்தப்படுகின்றனர்.
விஜய் அவரது தொண்டர்களின் இவ்வாறான செயல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சியிலிருந்து வெளியேறிய பெண்கள் மீதான அவதூறு பரப்பப்படுவதை நிறுத்த விஜய் பொறுப்பேற்க வேண்டும்.
இதனாலேயே, அக் கட்சியிலிருந்து வெளியேற பெண்கள் பயப்படுகின்றனர்.
வாக்குகளைப் பெறுவதற்காக விஜய் அரசியல் நாடகம் போடுகிறார். பொறுப்பற்ற தலைவரை தமிழக பெண்கள் தேர்வுசெய்ய மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.
பாஜகவின் கலை, கலாசார பிரிவின் மாநிலச் செயலராக இருந்த ரஞ்சனா, மும்மொழிக் கொள்கை திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக தவெக தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் மீது விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்த ரஞ்சனா, அக்கட்சியில் இருந்து விலகி, திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
Summary
TVK Vijay has to take accountability to stop abusing women who quit his party, says DMK Leader Ranjana Nachiyar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்
அரசியல் பகடைக் காய்களா குழந்தைகள்? விஜய் மீது புகார்!

முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்த முன்னாள் தவெக நிர்வாகி ரஞ்சனா நாச்சியார்!

திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
