அரசியல் நோக்கங்களுக்காக குழந்தைகளை பகடைக் காய்களாகப் பயன்படுத்துவதாக தவெக தலைவர் விஜய் மீது தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம் புகார் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக்கான தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதியில் முடிவடைந்தது. மே 4 ஆம் தேதியில் வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தின்போது வாக்குச் சேகரிப்புக்காக குழந்தைகளைப் பயன்படுத்தியதாக தவெக தலைவர் விஜய் மீது இந்தியத் தேர்தல் ஆணையத்திடமும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம் புகார்க் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
புகாரின்படி, குழந்தைகளை பெற்றோரிடம் அடம்பிடிக்க வைத்து விஜய் வாக்கு சேகரித்ததாகக் கூறுகிறது. அரசியல் நோக்கங்களுக்காக குழந்தைகளைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்துவது கண்டனத்துக்குரியது.
இதனால், குழந்தைகள் அழுவது, பிடிவாதம் பிடிப்பது போன்ற பாதிப்புக்குள்ளாகி, குழந்தைகள் மூலம் வாக்காளர்களைப் பாதிப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது.
குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்யக் கூடாது என 2023 ஆம் ஆண்டிலேயே தேர்தல் விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தத் தேர்தல் விதிகளை மீறிய விஜய் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பொதுமக்களிடமும் விஜய் மன்னிப்பு கோர வேண்டும்.
மேலும், இதனை மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
Summary
Tamil Nadu Commission for Protection of Child Rights Files Complaint Against TVK Cheif Vijay
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு தேர்தல்! தவெக வெற்றிபெற்றது எப்படி?
குழந்தைகளை அடம்பிடிக்க வைத்த விஜய்: மன உளைச்சலான விசிக நிர்வாகி புகார்

சொல்லப் போனால்... ரசிக வெறியும் அரசியல்மயமும்

தலைமை தேர்தல் அதிகாரியிடம் விஜய் புகார்! | Vijay | TVK
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
