திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய ஜனநாயகக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போட்டியிடும் தொகுதி குறித்து நாளை அறிவிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி கூட்டணியுடனான தொகுதிப் பங்கீட்டில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், தேமுதிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மமக, உள்ளிட்ட கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கூட்டணியில் எஞ்சியுள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இதனிடையே சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரிக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டது. திமுக கூட்டணிப் பங்கீட்டுக் குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மனிதநேய ஜனநாயகக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் தமிமுன் அன்சாமி பேசியதாவது:
''திமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயகக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாகை உள்பட 5 தொகுதிகள்க் கொண்ட விருப்பப் பட்டியலை திமுக தலைமையிடம் கொடுத்துள்ளோம். இதில் போட்டியிடவுள்ள தொகுதி குறித்து விரைவில் அறிவிப்போம். முதல்வர் மு.க. ஸ்டாலின் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறோம். நாளை மீண்டும் மகிழ்ச்சியுடன் செய்தியாளர்களை சந்திக்கிறேன்'' எனக் குறிப்பிட்டார்.
Summary
TN Assembly election 2026 One seat has been allocated to Manithaneya Jananayaga Katchi part of the DMK alliance
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொடா்ந்து கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு: அதிருப்தியில் திமுக, அதிமுக தொண்டா்கள்

புரட்சி பாரதம் கட்சிக்கு கே.வி. குப்பம் தொகுதி ஒதுக்கீடு!
தமிழர் தேசம் கட்சிக்கு 1 தொகுதி! உதயசூரியன் சின்னத்தில் போட்டி!

தே.ஜ. கூட்டணியில் தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு இடம்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


