அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அக்கட்சி கேவி குப்பம் தொகுதியில் களம்காண்கிறது. இதுகுறித்து அக்கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி அளித்த பேட்டியில், அதிமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கிறோம். அதிமுக கூட்டணியில் கூடுதல் இடம் பெற வேண்டும் என நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர். எடப்பாடி பழனிசாமி எனக்கு ஆறுதல் கூறி சமாதானப்படுத்தினார்.
புரட்சி பாரதம் தொண்டர்களும் சமாதானமாகி அதிமுக கொடுத்த ஒரு இடத்தில் போட்டியிடுகிறோம். புரட்சி பாரதம் கட்சி கே.வி.குப்பம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறது. இவ்வாறு குறிப்பிட்டார். அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற புரட்சி பாரதம் கட்சி மூன்று தொகுதிகள் கேட்ட நிலையில், அக்கட்சிக்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டது.
இதனால் அக்கட்சியினர் அதிருப்தியடைந்தனர். பெரும்பாலான நிர்வாகிகள் அதிமுக கூட்டணியில் இருந்து விலகிவிடலாம் என்று வலியுறுத்தியிருந்த நிலையில் கூட்டணி நிலைப்பாடு குறித்து அக்கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி வெள்ளிக்கிழமை தெளிவுபடுத்தியுள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்புமனுத் தாக்கல் மாா்ச் 30-ஆம் தேதி தொடங்கி ஏப்.6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியும், அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தோ்தலில் களம் காண்கின்றன. இவை தவிர நாம் தமிழா் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகளும் தோ்தலில் தனித்துப் போட்டியிடுகின்றன.
தேர்தலுக்கு இன்னும் 26 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகிறது. எதிர்கட்சியான அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியை பங்கீட்டு வழங்கி வருகிறது.
Summary
One seat has been allotted to the puratchi bharatham Party in the AIADMK alliance
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

வேட்பாளா் அறிமுகம்...

தொடா்ந்து கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு: அதிருப்தியில் திமுக, அதிமுக தொண்டா்கள்

திமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயகக் கட்சிக்கு ஒரு தொகுதி!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


