தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தொகுதி மாறுவதாக நான் கூறவில்லை: செல்வப்பெருந்தகை

தொகுதி மாறுவதாக நான் கூறவில்லை என்று செல்வப்பெருந்தகை பேட்டி.

News image

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை - கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 1:31 pm IST

தொகுதி மாறுவதாக நான் கூறவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

”திராவிட முன்னேற்றக் கழகத்துடன், அவர்கள் அமைக்கப்பட்டு உள்ள குழுவோடு, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

போட்டியிடும் தொகுதிகள் குறித்து திமுகவிடம் பேசி உள்ளோம். பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்துள்ளது.

சில நாள்களில் தொகுதிகள் இறுதியாகும். நாங்கள் கேட்கும் தொகுதிகளை திமுகவும் கேட்கிறது, அவர்கள் கேட்கும் சில தொகுதிகளை நாங்களும் கேட்கிறோம்.

திமுக குழு கொடுக்கும் தொகுதி பட்டியலை காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பி ஒப்புதல் பெற்று இறுதி செய்யப்படும். தொகுதி மாறுவதாக நான் கூறவில்லை” என்றார்.

வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை எழும்பூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை போட்டியிட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், நான் தொகுதி மாறுவதாக கூறவில்லை” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார்.

Summary

Tamil Nadu Congress Committee President Selvapperundhakai has said that he is not saying that he will change constituencies.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.